Wednesday, March 7, 2012

எங்கேயோ கேட்டவை

சமீபத்தில் சென்னையிலிருந்து என் சொந்த ஊருக்கு காரில் தனியே பயணிக்க நேர்ந்தேன். என்னை அழைத்துச்செல்ல வந்த ட்ரைவர் சுமார் 20 வயது இளைஞர். சிறுவன் என்பதே தகும். பயணிக்க தொடங்கிய சில நேரத்தில் "வெள்ளை பூரா ஒன்று" என்ற பாடலை CD Playerல் ஒலிக்கச்செய்தான். Cell Phone நோன்டிக்கொண்டிருந்த நான், வெள்ளை பூரா ஒன்று மீண்டும் play ஆவதை கவனித்தேன். மூன்று, நான்கு...

வேற பாட்டு போடுங்களேன் என்றென். "ஒரு CD full இந்த பாட்டு மட்டும் தான் copy பண்ணிருக்கேன் sir" என்றான். மூன்று மணி நேர பயணம். ஒரு மந்தை வெள்ளை புறாக்கள் பறந்தன. ஒவ்வொரு முறையும் அந்த பாடலில் "இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம்" என்னும் வரிகள் வரும்போதெல்லாம் அதை உறக்க பாடி முடித்து horn ஓங்கி அடிப்பான்.

வீடு சேர்ந்து தூங்க முயற்சித்தும், சில வெள்ளை புறாக்கள் இன்னும் என் மண்டைக்குள் பறந்து கொண்டிருந்தன.

நல்ல பாடல்கள் தேறுவது சுலபம். சிறந்த பாடலை தேறுவது அப்படி அல்ல. சிறந்த பாடல் என்று ஒன்று இருப்பதில்லை. ஒவ்வொரு கால கட்டத்திலும் சில காரணங்களுக்காக சில பாடல்கள் நமக்கு மிகவும் பிடித்த பாடலாக இருக்கிறது. நமக்கு நமக்காக பிடித்த பாடல்கள் பல. மற்றவர்களால் பிடித்துப்போன பாடல்கள் சில. இந்த இரண்டாம் வகயராவில் விழும் என் தனிப்பட்ட நினைவுகளின் தொகுப்பே இந்த பதிப்பு.

எங்கள் Churchசில் December தோறும் கிறிஸ்துமஸ் விழா போட்டிகள் நடைபெறும். ஒன்றாம் வகுப்பு நுழயும் எவரும் அதில் கண்டிப்பாக பங்கேர்ப்பார்கள். Higher Secondary, Youth என வயது வாறியாக போட்டிகள் நடைபெறும்.

6 வயதில் முதல் முறையாக நடனப்போட்டியில் பங்கேட்றேன் பங்கேர்க்கப்பட்டேன் எனலாம். "ராஜா கைய வெச்சா" பாடல் அப்போது சமீபத்திய பிரபலம். என் அண்ணன் அதர்க்கு Die hard fan. வெள்ளை நிற சட்டை பாண்ட், Cooling glass சகிதமாக மேடை ஏற்றப்பட்டேன்

"ராஜா கைய்யா வெச்சா" ஒலிக்கதொடங்கியது. என் நினைவு தெரிந்து நான் அசயக்கூடவில்லை. கூட்டம் ஆர்பரித்தது. அவர்களுக்கு கொண்டாடத்தேவயான வார்த்தை அதில் இருந்தது. "ராஜா"...

பொறியியல் இரண்டாம் ஆண்டு. முதல் ஸெமெஸ்டர் பாடம் ஒன்றில் அரியர் வைத்திருந்தேன். துரோகிகள் என்னை கைவிட, உற்ற நண்பன் அருண்ராஜ் மட்டும் துணை நின்றான். தேர்வுகள் முடிந்து என் வகுப்பு மாணவர்கள் விடுமுறையில் செல்ல, அடுத்த 10 நாட்கள் தேர்வுக்காக காத்திருக்களானோம். நான், அருண்ராஜ் மற்றும் ஒரு Win 2000 Computer

ஓரமாக நின்று வேடிக்கைபார்த்துவிட்டு வந்து "Love failure" எனக்கணக்கெழுதும் இதயம் முரளி வழிவந்தவன் அருண்ராஜ் என முதல் நாளிலேயே தெரிந்தது. அந்த பெண்ணின் பெயர் பிரியா.

" பிரியா பிரியா", "பிரியா பிரியா பிரியா" என தொடங்கி, Run படத்தில் வரும் "Yeah yeah பிரியா" வரை அத்தனை பிரியாக்களுக்கும் ஹார்ட் டிஸ்க் இல் ப்ரீயாக இடம் தந்தான். முழு நேரமும் பிரியா பாடப்படுவாள். Bore அடிக்கும்போது மட்டும் கொஞ்சம் பிரியா. தூங்கும்போது sound கம்மியாக பிரியா.

பொறியியல் 4ஆம் ஆண்டு. சென்னை KMC கல்லூரி கலை விழா போட்டிகளில் பங்கேர்க்க சென்னை வந்திருந்தோம். லைட் ம்யூஸிக் போட்டி அப்போது சென்னைக்கல்லூரிகளில் மட்டுமே நடைபெறும் ஒரு ஆடம்பரம். KCGTechன் lead singer வினீத் "தமிழா தமிழா" பாடி முடிக்ககயில், எழுந்து நின்று ஸல்யூட் அடித்தன என் உடல் உரோமங்கள்.

கப்பலேறிப்போயாச்சு பாடலின் Prelude Fluteள் வாசிக்க ஆரம்பித்த SRM நவீன், குழல் துவாரங்களில் மூச்சிறைத்து ரசிகைகளின் மூச்சடைத்தான். இவர்கள் இன்று Malayala பின்னணிப்பாடகராகவும், ஆர் ரகுமானின் ஆஸ்தான புல்லாங்குழல் இசைக்கலைஞராகவும் இருக்கிறார்கள்.

கடைசியாக மேடையேறிய MCC கல்லூரி மாணவர்கள், நான் அதுவரைக்கேட்திராத ஒரு தமிழ் ராக் இசைப்பாடலை பாடினார்கள். "நெஞ்சே துள்ளிப்போ". பாடிக்கொண்டிருக்கையில் மின்சாரம் சட்டென்று தடைப்ட, சலசலத்து இருளிலும் நிசப்தத்திலும் மூழ்கியது அரங்கு. சட்டென சுதாரித்த அந்த குழுவின் பாடகர், பார்வயாளர்கள் மத்தியில் இறங்கி வந்து "Lajjavathiye" பாடலை இசைக்கருவிகள் / ஒலிப்பெருக்கி இல்லாமல் பாடி கொள்ளை அடித்தான்.

அந்த போட்டியின் சிறந்த பாடகருக்கான பரிசை அவனுக்கே வழங்க "Benny" என்று அழைக்கப்பட, கூட்டத்துடன் நானும் உறக்க கை தட்டினேன். Benny Dayal

சமீபத்தில் நண்பர்களுடன் பாடல்களை அலசிக்கொண்டிருக்கயில் "அண்ணா நகர் முதல் தெரு" படத்தில் வரும் "மெதுவா மெதுவா ஒரு காதல் பாட்டு" பின்னே ஒலிக்க, “Wow. ராஜா Sir" என மெச்சினான் என் நண்பன். அது சந்திரபோஸ் இசையமைத்த பாடல் என திருத்தினேன். அவனை குற்றம் சொல்ல ஏதும் இல்லை.

ஆழ்கடலும் அலைதிரளும் ராஜா என்றான பின்

கரைகளும் நுறைகளும் என்னவாகும்...

நிழல்களின் கணங்களும், மணங்களில் ரணங்களும் மேலோன்கும்போது Appointment Fix பண்ண தேவை இல்லாமல் சிகிச்சைக்கு ராஜா Sir...

தூக்கம் அழைக்க "என்னவளே அடி என்னவளே", Beer தீர்ந்து போகயில் "Take it easy ஊர்வசி".

வாழும் கலை பற்றிய வகுப்புகள், யோகா மையங்கள் என வாழ்க்கையை கடினப்படுத்திக்கொள்கிறார்கள் என்றே தோன்றும்.

நாங்கள் இசைப்பிரியர்கள். எங்கள் வாழ்க்கை எளிமாயானது.

தோள் கொடுக்க ரகுமான். தூக்கி நிறுத்த ராஜா Sir. Period.

0 comments: