Monday, December 20, 2010

சினிமா ராகம் - 1

முன்குறிப்பு: இந்த வலைப்பதிவின் பதிவாளர்கள் மொத்தம் நான்கு பேர். நாங்கள் அனைவருமே இசையின் மீது அளவு கடந்த நாட்டமும், ஆர்வமும் கொண்டவர்கள். எங்களுக்கு தெரிந்த, புரிந்த சிலவற்றை, உங்கள் முன்னால் வைக்கின்றோம். அவ்வளவே. பிழைகள் இருந்தால் மன்னித்து திருத்தலாம்.


அந்த கால சினிமால, பாடல்களைச் சுற்றிதான் படமே இருக்கும். பதினைந்து பாட்டு, இருபது  பாட்டு, இப்போ குடும்ப கட்டுப்பாடு மாதிரி, அளவு கம்மி ஆகி,  படத்துக்கு கண்டிப்பா 4 - 6 பாடல்கள்னு நிலைமை இருக்கு. நான் அந்த கால (பாகவதர்-எம்.எஸ்.வி கால) பாடல்களை  அவ்வளவா கேட்டதில்லை. ஆனா, ராஜா பாடல்கள் கேட்காம இருந்ததில்லை. இன்னமும் கேட்காத ராஜா பாடல்கள் நிறைய இருக்கு. சாஸ்த்ரிய சங்கீதத்துல நாட்டம் இருந்தாலும், அதை கத்துக்க சரியான கால நேரம் இல்லை. இனிமே கிடைக்குமான்னும் தெரியலை. ஆனாலும், ஒரு சில ராகங்களை, கேட்டவுடனே கண்டுபுடிக்க முடியும்னு நம்பிக்கை இருக்கு. அந்த நம்பிக்கையை எனக்கு தந்ததும் ராஜாதான்.அப்படி இன்னைக்கு நான் சொல்ல போற ராகம், சாருகேசி.


சாருகேசி, ஒரு புத்துணர்ச்சியையும், கேட்கறவங்களுக்கும், பாடறவங்களுக்கும் ஒரு வித உற்சாகத்தையும் தரக் கூடியதுன்னு ஊரு பெரியவங்க எல்லாரும் சொல்றாங்க. இந்த ராகத்தோட நுணுக்கங்கள் எல்லாம் பெருசா தெரியலைன்னாலும், திரைப்படங்கள்ல இந்த ராகத்துல அமைந்த பாடல்கள், பெரும்பாலும் ஒரு வித பிரிவையும், வலியையும், ஏக்கத்தையும் வெளிப்படுத்துற விதத்துலையே இருக்கு. அப்படி இல்லாத பாடல்களும் இருக்கு. ஒரு சில பாடல்களை வெச்சு இந்த ராகத்தைக் கொஞ்சம் ஆராயலாம்.


1. மன்மத லீலையை வென்றார்
இது, ஆல் டைம் ப்ளே பாய் திரு தியாகராஜா பாகவதரோட பாட்டு. "என் மேல் உனக்கேனோ, பாரா முகம்"னு வர எடத்துல இருக்கற டியூன கவனிச்சீங்கன்னா, ஒரு வித ஏக்கம் இருக்கும். நடுவுல வர "ரம்பா!!... சுவாமி!!" டயலாக் எல்லாம் எந்த ராகம்னு கேட்காதீங்க. ”என்னுடனே நீ பேசினால் வாய் முத்து சிந்தி விடுமோ, உன்னை என்னேரமும் நினைந்துருகும் என்னிடம்  வந்தால் மெனக்கெடுமோ” இப்படி பாட்டு முழுக்கவே ஒரு வித ஆதங்கத்தை வெளிபடுத்திருப்பாறு நம்ம கதையின் நாயகன்.


2. வசந்த முல்லை போலே வந்து
இந்த பாட்டுலையும் முதல்ல வர டயலாக்கை விட்டுடுங்க. "மாயமெல்லாம் நானறிவேனே வா வா" same பீலிங். இப்படி ரெண்டு பாட்டுமே ரொம்ப ஏக்கத்தோட இருக்கு. இப்போ சீன்ல நம்ம ராஜா வராரு.


3. ஆடல் கலையே தேவன் தந்தது.
போன பாடல்களை போல இல்லாம, இந்த பாட்டு, பெரும்பாலும், சிறப்பை சொல்றா மாதிரியும், வர்ணிப்பு மாதிரியும்தான் இருக்கும். இதே ராகத்தை ராஜா மேல சொன்னா மாதிரியும் பயன்படுத்திருக்காறு.


4. காதலின் தீபம் ஒன்று
எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும்.இது, பிரிவையும், ஏக்கத்தையும் ரொம்ப அழகா சொல்ற பாட்டு. ஆனா, இந்தப் பிரிவு ஏக்கம் எல்லாம் காதல்ல மட்டும்தான, இல்லவே இல்லை. மறுபடியும் ராஜா வராரு


5. மணமாலையும் மஞ்சளும் சூடி
தங்கையோட கல்யாணத்தைப் பத்தியும், எதிர்காலத்தைப் பத்தியும் கனவோட இருக்கற ஒரு அண்ணனோட அழகான பாட்டு. மறைமுகமா, இதுல பிரிவை உணர்த்திருந்தாலும், பாடல் வரிகள்ள அவ்வளவு வெளிப்படையா இல்லை. கேட்கற நிறைய பேரை புல்லரிக்கவைக்கற பாடல். (goosebumbpsனு இங்கிலிஷ்ல சொன்னா நல்லா இருக்கு:)


6.ஏதோ ஏதோ ஒன்று
சமீப காலங்கள்ல, நிறைய சாருகேசி கேட்க முடியறதில்லை. ரஹ்மான் இசையமைச்ச இந்த பாடல், என்னை அவ்வளவா இம்ப்ரெஸ் பண்ணலைன்னாலும், நல்ல பாடல்தான். ஆனா, இதே ராகத்துல ரஹ்மான் இம்ப்ரெஸ் பண்ண இன்னொரு பாடல் இருக்கு.


7. உதயா உதயா
படம் அட்டு பிளாப். படத்தோட ஒரே ப்ளஸ் இந்த பாட்டுதான். பாட்டு போட்டிகள்ள, தங்களோட திறமைய நிரூபிக்க, நிறைய பேர் இத பாடி கேட்ருக்கேன். ஹரிஹரன் சாதரணமாவே சங்கதியெல்லாம் போட்டு பின்னுவாறு. இதுல இன்னும் ஒரு படி மேல போயிருப்பாரு. (ரிக்கார்டிங் பண்ணும்போது, பயந்து ஏ.சி ஆஃப் பண்ணிட்டாங்களாம்). இந்த ரெண்டு பாடல்களுமே, முன்னாடி சொன்னா மாதிரி, ஒரு வித வலியையும், பிரிவையும் உணர்த்துது.


இன்னும் இந்த ராகத்துல மதராசபட்டினத்தின் ஆருயிரே, எங்கேயும் காதலின் நெஞ்சில் நெஞ்சில் மாதிரி பாடல்களும், இன்னும் நிறைய பாடல்களும் இருக்கு. ஆனா, இது வரைக்கும் சொன்னதுலையே, உங்களுக்கு ஒரு ஐடியா கிடைச்சிருக்கும்னு நம்பறேன். ஒரு ராகத்தை கண்டுபிடிக்க, ஓவரா சங்கீதம் தெரிஞ்சிருக்கணும்னு அவசியம் இல்லை. ஒரு பேஸிக் ஐடியா இருந்தா போதும்னு சொல்லவே இவ்வளவும். பாடலோட feelனு  சொல்லுவாங்களே, அதை வெச்சே முக்கால் வாசி ராகங்களை கண்டுபுடிக்கலாம். கீழ, சாருகேசி ராக பாடல்கள் சிலதை சின்னசின்னதா மொத்தமா இணைச்சிருக்கேன். கேட்டு பாருங்க. நீங்களும் அடுத்த முறை சுலபமா சாருகேசிய புடிக்கலாம்.




7 comments:

Philosophy Prabhakaran said...

வலைப்பூவுலகிற்கு உங்களை வருக வருக என வரவேற்கிறேன்...

கா.கி said...

வரவேற்பா?? என்னங்க, என்னை அடையாளம் தெரியலியா...

S said...

super collection. அடுத்து என்ன ராகம்?

கா.கி said...

@s

அனேகமா ஷண்முகப்பிரியா

சமுத்ரா said...

hmm good ..ஆடமோடி கலதே வில் மயங்காதவர்கள் உண்டா?'சின்னத் தாயவள் தந்த ராசாவே' யை விட்டுட்டீங்களே?

Thamizhi said...

hi...eatho eatho eatho onru is by Harish Jeyaraj in leasa leasa, isnt it...not by ARR

கா.கி said...

@samudra
எனக்கு புடிச்ச லிஸ்ட் இது..
sorry for late reply..


@bhar
இந்த ஏதோ எதோ ஒன்று பாட்டு, எனக்கு 20, உனக்கு 18 படத்துல வரது..