Thursday, December 30, 2010

Hands of Fury


Violin, Flute, Piano, Drums என பெரும்பாலான இசைக்கருவிகளின் சப்தங்கள், ஒரு சராசரி இசைப் பிரியனுக்குப் பரிச்சயமானவையே. 2 Keyboard & 2 Pads இருப்பின், இன்றைய சினிமாவின் அதனை பாடல்களும் (almost) அதே தரத்தில் reproduce செய்வது சாத்தியமே. மார்க்கெட்டில் கிடைக்கும் தொழில்நுட்ப வளர்ச்சிகளின் உச்சக்கட்ட மென்பொருட்கள், இசை கலைஞர்களின் வயிறோடு சேர்த்து இசையையும் அடிப்பது நிஜமே.

காதலனை காதலி தூக்கி எறியும்போது, பின்னால் அலறுவது 100 violinஆக இருக்க அவசியம் இல்லை. ஒரு sound engineer அதை ஒரு Keyboardஇல் சாத்தியம் செய்துவிடுவார். செலவு குறைவு, பிசிறில்லாத தரம், குறைந்த நேரம் என எல்லா பாஸிடிவ் விஷயங்களுக்கு மத்தியில், லைவ் இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் என்கிற உண்மையான இசைக்கருவிகளின் பயன்’பாட்டை’ தங்கள் பாணியாகவும், முத்திரையாகவும் வைத்திருக்கும் ஒரு சில இசையமைப்பாளர்கள் மனமார்ந்த பாராட்டுக்குரியவர்களே.

அப்படி சமீப காலமாகப் பயன்படுத்தப்படும் ஒரு தோல் (Also available in Synthetic heads) கருவியினை பற்றியே இந்தப் பதிவு. தர்பூகா / Darbuka-Doumbek-Darbouka-Derbouka-The Belly Dance Drum எனப் பலவாறாக அறியப்படும் இந்த இசைக்கருவியின் பூர்வீகம் (Assumed to be of Middle East, some claim it to be Arabic and some to be Turkish) சரியாக தெரியவில்லை. தொடை உயரம் உள்ள ஒரு பெரிய Y வடிவமைப்பு உடைய இந்த டிரம்ஸின் அதிர்வு (Resonance) ஒரு sharp toneஐ எழுப்புகிறது. அரேபிய இசையில் தர்பூகா, முக்கிய இசைக்கருவியாக பயன்படுத்தப்படுவதால், இந்திய சினிமா பாடல்களிலும் அதை ஒத்த இசை சூழல்களுக்கு உபயோகிக்கபடுகிறது.

குரு படத்தின் மைய்யா மைய்யா, ரங் தே பஸந்தியின் கல்பலி, வ குவார்ட்டரின் சவுதி பாஷாபோன்ற சில பாடல்கள் முழுக்க தர்பூகா percussion கொண்டவை.

தெரிந்த இசைக்கருவிகளையும், அவற்றை வாசிக்க பயின்ற இசை கலைஞர்களையுமே ஒதுக்கி வரும் திரையிசை உலகில், இதுபோன்ற புதிய முயற்சிகள், உலக இசையை இந்தியனுக்கு ஏற்றார் போல வழங்கும் முயற்சியே. பாராட்டுவோம், ஒரு மொழி பேசுவோம்.

0 comments: